"சிறிய மூர்த்தி பெரிய கீர்த்தி" என்பார்கள் அது போல, அமுக்காரா என்று தமிழிலும், Winter Cherry என்று ஆங்கிலத்திலும், Withania somnifera Linn என்று லட்டின்னிலும் அழைக்கபடும் அஸ்வகந்தா பூமிக்கு மேல் வளரும் சிறியக்குறுஞ்செடியாயிருந்தாளும் உடலின் ஆரோக்கியத்திற்க்கு உதவும் உச்ச கட்ட மருந்தாக திகழ்கிறது. ஆரோக்கியம் என்பது உடல் பலத்தை மட்டுமே கூட்டுவதல்ல மன பலத்தையும் ஒரு சேர பெருக்கி மனிதனின் தலையான கடமைகளான தர்மம்,செல்வம்,இன்பம்,மோக்ஷம் ஆகியவற்றை பூர்த்தி செய்ய துணைபுரிவதேயாகும். நம் முன்னோர்களின் மூத்த வைத்தியரான ச்சரக்க முனியின் கூற்று: "நம் வாழ்க்கையை தாங்கி பிடித்து ஆதாரமாக திகழும் தூண்களாக விளங்குவது உணவு, தூக்கம் மற்றும் இல்லற வாழ்க்கை". இம்மூன்றையும் பலப்படுத்தும் திறவுக்கோளாக விளங்கும் சிறிய கீர்த்தி அஸ்வகந்தையாகும். ராஜ நிகன்டு என்னும் நூலில் அஸ்வகந்தாவிற்க்கு இறுபத்துமூன்று சம பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அப்பெயர்களுள் சிலவற்றை அதன் தோற்றத்தையும், அதன் பயனையும், அதன் வேர் வாசனையையும் குறிக்கிறது. 1.வாசனை அடிபடையில் : அஸ்வகந்...
Knowledge on Healthy living