நம் முன்னோர்களின் மூத்த வைத்தியரான ச்சரக்க முனியின் கூற்று:
உணவு,
தூக்கம் மற்றும்
இல்லற வாழ்க்கை".
இம்மூன்றையும் பலப்படுத்தும் திறவுக்கோளாக விளங்கும் சிறிய கீர்த்தி அஸ்வகந்தையாகும்.தூக்கம் மற்றும்
இல்லற வாழ்க்கை".
ராஜ நிகன்டு என்னும் நூலில் அஸ்வகந்தாவிற்க்கு இறுபத்துமூன்று சம பெயர்கள் கூறப்பட்டுள்ளது.
அப்பெயர்களுள் சிலவற்றை அதன் தோற்றத்தையும், அதன் பயனையும், அதன் வேர் வாசனையையும் குறிக்கிறது.
1.வாசனை அடிபடையில் :
அஸ்வகந்தா, ஹயகந்தா,வாஜிகந்தா, கந்தப்பத்திரி என்று பெயர்கள் உள்ளன.உட்பொருள்:
- அஸ்வ,ஹய, வாஜி என்றால் குதிரை, கந்தா என்றால் வாசனை,
- இக்குறுஞ்செடியின் வேரானது குதிரையின் நாற்றம் போல் இருக்கும் மேலும் பத்திரி என்றால் இலைகள்,அதன் இலைகளும் குதிரையின்நாற்றம் போன்றே மிகவும் வாசனையாகயிருக்கும், ஆதலால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
2.தோற்றத்தின் அடிப்படையில் :
கம்புக்காஷ்டா,பிவரா,வராஹபத்திரி,ஸ்யாமலா,பலாஸபர்னி, வனஜா என்று பெயர்கள் உள்ளன.உட்பொருள்:
- கம்புக்காஷ்டா: அதன் தண்டம் சங்கு போன்ற துவாரம் உடையது போல் உள்ளது.
- பிவரா, வராஹகர்னி &வராஹபத்திரி: அதன் இலைகள் (வராஹ) பன்றியின் காது போன்று நீள்வட்டம்(ovate leaf)போல் உள்ளது.
- ஸ்யாமலா: அதன் வேர் பழுப்பு நிறம் போல் உள்ளது.
- பலாஸபர்னி: பலாஸ மரத்தின் இலைகளைப்போலுள்ளது ,
- வனஜா: காடுகளில் அதிகம் விளையும்.
- ஷுஸ்க: இச்செடி வறட்சியான இடங்களில் மிகுதியாக வளரும்.
3.பயனின் அடிப்படையில் :
ஹயி, துரகி, வாஜினி, பலதா, பல்ய, புஸ்டிதா,புன்யா, வாதக்கினி,காமரூப்பினி,காலபிரியகாரி என்று பெயர்கள் உள்ளன.உட்பொருள்:
- ஹயி, துரகி&வாஜினி: குதிரையின் சக்தியை போல் ஆண்மையின் வீர்யத்தை அதிகரிக்ககும்.
- பலதா&பல்ய: உடலுக்கும் மனதுக்கும் சக்தியை தரும்.
- புஸ்டிதா: உடல் பருமனை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
- புன்யா: அறிவு மிகுந்த மக்கட்செல்வத்தை ஈட்டித்தரும்,
- வாதக்கினி: வாதத்தை சமநிலையில் வைக்கும்
- காமரூப்பினி:இது இன்பத்தின் அம்சமாகும்,
- காலபிரியகாரி: முக்காலத்தவற்கும் (குழந்தை, இளமை, முதுமை காலம்) ஏற்புள்ளதாகும்
4.மேலும் இச்செடியின் வேரை குதிரைகளுக்கும் பன்றிகளும் விரும்பி சாப்பிடுவதனால் ஹயபிரியா, வராஹகாமி, வராஹிகா என்று அழைக்கப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் ஒவ்வொரு பொருட்களுக்கும் 7 விதமான தன்மைகள் உண்டு அதை "சப்த பதாற்தா" என்று வருனிப்பர்.
அதுபோல மூளிகையாக திகழும் அஸ்வகந்தா பின்வரவுள்ள 7 தன்மைகளைக்கொன்டுள்ளது.
அஸ்வகந்தாவின் தன்மை:
2. குணம் : உஷ்ணம்
3. வீர்யம்(ஆற்றல்): உஷ்ணம்
4. விபாக்கம்(செரிமான சுவை) :காரம்
5. பிரபாவா(விஷேச தன்மை) : விர்ஷ்யம்(குறிப்பாக மக்கட் பேறு பெருவதற்கும் ஆண்மை தன்மையை அதிகரிக்க உதவுகிறது),போதுவாக விர்ஷ்ய பொருட்கள் இனிப்பு சுவையையும் குளிர் தன்மையையும் பெற்றிருக்கும். இங்கு மாறாக உள்ளது அதுவே அதன் சுபாவம்.
6. கர்மா(செயல்) :
- தோஷ கர்மா :
வாத, கப தோஷங்களை ஷமிபிக்கும்(அஸ்வகந்தாவின் ரசத்தன்மையினாலும் குணத்தின் காரணத்தினாலும் அவற்றின் அதிக செயலைக் குறைக்கும்),வாதத்தை சரிவர இயக்கும்.
- தாத்து கர்மா (உடலின் ஆக்கமூலப்பொருளின் செயல்):
- பலத்தை அதிகரிக்கும்,
- இளமையான தோற்றத்தை அளிக்கும்(Rejuvenator) ,
- முதுமையை குறைக்கும்,
- புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும்,
- வேதனையை நிறுத்தும்.
- அக்னி கர்மா:
- பசியை தூண்டும்,
- நல்ல உறகத்தை தரும்(Antistress agent).
- நோய்களை தீர்க்கும் கர்மா:
- சளி, இரும்பல்(காசம் குறிப்பாக வாதஜ மற்றும் ஷயஜ காசம்) , மூச்சு தினறல்கள் (ஸ்வாசம் குறிப்பாக ஷுத்ர, தமக, ஊர்த்துவ மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள அனைத்து ஸ்வாசதிற்க்கும் ஏற்றது) , பலவீனத்தினால் வரும் நோயய்கள் (ஷயம்) ஆகியவையை குணப்படுத்தும் ஏனென்றால் இதில் Immunostimulatory தன்மை உள்ளது,
- காயங்களை(விரணம்)எளிதில் குணப்படுத்தும் ஏனென்றால் இதில் Anti inflammatory என்று அழைக்கப்படும் தன்மை நிரைந்து உள்ளது.
- வெண் சரும நோய்(சிட்ம), தோல் நோய்கள்(குஷ்டம் குறிப்பாக வாத கபா ஆதிக்கியவைகள்), வீக்கம்(ஷோத்தம்) ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஏனென்றால் இதில் steroidal lactose and steroidal alkaloids என்கிற வேதி தன்மை உள்ளது.
7.நோய்களை குணமாக்க உபயோகிக்கும் முறை:
- மூச்சு தினறல்கள் (ஸ்வாசம்) :அஸ்வகந்தா ஷாரத்தை(கார), சமமற்ற அளவில் தேனையும் நெய்யையும் சேர்த்து கலந்து அடிக்கடி உண்ண வேண்டும்.
- தூக்கமின்மை, சுகமான தூக்கம் பெற அஸ்வகந்தாவின் சூர்ணத்தை சர்க்கரையுடனும் நெய்யுடனும் சேர்த்து கலந்து இரவில் தூங்குவதற்க்கு முன் உணவு சாபிட்டபிறகு உண்ண வேண்டும்.
- அனைத்துவிதமான கட்டிகளை கரைக்க அஸ்வகந்தாவின் இலைகளை வைத்து பத்து போட வேண்டும்.
- வாதத்தினால் ஏற்படும் இருதய நோயை குணப்படுத்த அஸ்வகந்தா இலையை அரைத்து அதை பசையாகி அதில் தாண்றிகாவின் போடி மற்றும் வெல்லத்தை சேர்த்து வெந்நீருடன் உணவு உண்ட பிறகு அல்லது ஒவ்வொரு சாப்பாட்டு உருண்டையுடன் சேர்த்து அல்லது ஒவ்வொரு சாப்பாட்டு உருண்டைக்கு நடுவில் பருக வேண்டும்.
- குழந்தை புஸ்டியாகவும் ஆரோக்கியமாக வளர அஸ்வகந்தாவால் செய்யபட்ட நெய்யை சாப்பிட்ட பிறகு பருகவைக்க வேண்டும்.
- அஸ்வகந்தா பால் கஷாயத்தை நெய்யுடன் சேர்த்து மாதவிடாய் முடிந்து ருத்துகாலத்தில் உள்ள பெண்கள் குளித்தபிறகு பருகினால் எந்தவித ஐயமுமின்றி மக்கட்பேறு பெறுவர்.
- மெலிந்து போன அங்கங்களைஅஸ்வகந்தாவினால் செய்த தைலத்தை கொண்டு தேய்த்தால்(ABHYANGAM) பலமிகுந்தவையாக மாறும்.
- குழந்தைகளுக்கு பாப்பாய் (popeye) போன்று சக்திவர வேண்டும் என்றால் அஸ்வகந்தாவின் வேரில் பால் கஷாயம் செய்து நெய் சேர்த்து பால் கொண்டு உணவு உண்ட பிறகு பருக வேண்டும்.
- முதுமையில் இளமை காண சிசிர காலத்தில் அஸ்வகந்தாவின் தண்டத்தை சூர்ணம் செய்து அதனுடன் சமமற்ற அளவில் நெய்யையும் தேனையும் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட வேண்டும்.
- உடம்பில் புதிய செல்கள் உற்பத்தியாகவும், ஆரோக்கியம் பேம்படவும் தினமும் ஒருபஷம் (15days) வரை அஸ்வகந்தா சூர்ணத்தை பால் அல்லது நெய் அல்லது தைலத்தோடு சேர்த்து உண்ண வேண்டும்.


Comments
Post a Comment